ஐரோப்பா

பிரித்தானிய பொதுத் தேர்தல் – கலைக்கப்பட்டது நாடாளுமன்றம்

பிரித்தானிய நாடாளுமன்றம் பொதுத் தேர்தலை முன்னிட்டு கலைக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் ஜூலை மாதம் 4ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் அதில் 14 ஆண்டுக் காலம் ஆட்சி செய்துவரும் கன்சர்வேட்டிவ் கட்சியின் அதிகாரம் முடிவுக்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்த்தரப்பான தொழிலாளர் கட்சி இம்முறை ஆட்சியைக் கைப்பற்றக்கூடும் என்று கவனிப்பாளர்கள் கணிக்கின்றனர்.

நாடாளுமன்றத்தில் 650 இடங்களுக்கான போட்டி நிலவுகிறது. அதை முன்னிட்டு 5 வாரப் பிரசாரம் அதிகாரபூர்வமாகப் பிரித்தானியாவில் தொடங்கியுள்ளது.

129 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் மீண்டும் களமிறங்கப் போவதில்லை என்று அறிவித்தனர்.

அவர்களில் 77 பேர் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்தவர்கள். பல உறுப்பினர்கள் ஜூலையில் திடீரெனத் தேர்தல் அறிவிக்கப்பட்டது அதிர்ச்சியளிப்பதாகக் கூறினர்.

பிரித்தானியாவில் தேர்தல் இவ்வாண்டின் பிற்பாதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரதமர் ரிஷி சுனக் ஜூலை 4ஆம் திகதி தேர்தல் என்று கடந்த வாரம் அறிவித்தார்.

(Visited 48 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்