உக்ரைனுக்கு 16 மில்லியன் பவுண்டுகளை வழங்கும் பிரித்தானியா!

உக்ரைனின் இணைய பாதுகாப்பை மேம்படுத்த பிரித்தானியா 16 மில்லியன் பவுண்டுகளை வழங்கும் என பிரதமர் ரிஷி சுனக் உறுதியளித்துள்ளார்.
ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் மற்றொரு எதிர்த்தாக்குதலை ஆரம்பித்துள்ளது. உக்ரைனின் முக்கியமான தேசிய உள்கட்டமைப்பை ரஷ்யா குறிவைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரித்தானியா இந்த உதவி தொகுப்பை அறிவித்துள்ளது. இது “உக்ரைன் மீதான ரஷ்யாவின் பயங்கரமான தாக்குதல்கள் அவர்களின் காட்டுமிராண்டித்தனமான நில ஆக்கிரமிப்புடன் மட்டுப்படுத்தப்படவில்லை.
ஆனால் அவர்களின் இணைய உள்கட்டமைப்பைத் தாக்கும் மோசமான முயற்சிகளையும் உள்ளடக்கியது, இது வங்கியிலிருந்து எரிசக்தி விநியோகம் வரை, அப்பாவி உக்ரேனிய மக்களுக்கு முக்கிய சேவைகளை வழங்குகிறது பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளார்.
(Visited 16 times, 1 visits today)