ஹமாஸ் தொடர்பில் வெளிநாட்டவர்களுக்கு பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை

பிரித்தானியாவில் வாழும் வெளிநாட்டவர்கள், யூத விரோத செயல்களில் ஈடுபட்டாலோ அல்லது ஹமாஸைப் புகழ்ந்தாலோ நாடுகடத்தப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.
பிரித்தானிய புலம்பெயர்தல் அமைச்சரான ராபர்ட் ஜென்ரிக் (Robert Jenrick), தேசிய பாதுகாப்பு கருதி, வெறுப்புக் குற்றங்களில் ஈடுபடுவோரின் விசாக்களை ரத்து செய்வதற்கான வழிகளை ஆராயுமாறு உள்துறை அலுவலக அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் (Gerald Darmanin), பிரான்சில் யூத விரோத செயல்களில் ஈடுபடும் அனைத்து வெளிநாட்டினரையும் நாடுகடத்த உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவு காரணமாக ஏற்கனவே 3 பேர் பிரான்சில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
(Visited 11 times, 1 visits today)