இலங்கை வரும் போது விபத்துக்குள்ளான கப்பலால் உடைந்த பாலம் – புதிய கால்வாய் திறப்பு
இலங்கை வரும் போது கப்பல் விபத்துக்குள்ளான அமெரிக்காவின் பால்ட்டிமோர் (Baltimore) துறைமுகம், பாலம் இடிந்துவிழுந்த சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு புதிய கால்வாயைத் திறக்கத் தயாராகி வருகிறது.
வர்த்தகக் கப்பல்கள் துறைமுகத்தைக் கடந்துசெல்ல அது உதவியாக இருக்கும் என கூறப்படுகின்றது.
பால்ட்டிமோர் நகரின் பிரான்சிஸ் ஸ்காட் கீ (Francis Scott key) பாலம் சென்ற மாதம் (மாரச் 2024) 26ஆம் திகதி டாலி சரக்குக் கப்பல் மோதியதில் இடிந்துவிழுந்தது.
அதில் கட்டுமான ஊழியர்கள் 6 பேர் உயிரிழந்துள்ளனர். கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் அதிகாரிகள் புதிய கால்வாயைத் திறக்கத் தயாராகின்றனர். புதிய கால்வாய் ஏறக்குறைய 11 மீட்டர் ஆழத்தைக் கொண்டிருக்கும்.
துறைமுகத்தில் ஏழு சரக்குக் கப்பல்கள் சிக்கியுள்ளன. அவற்றில் ஐந்து வெளியேறப் புதிய கால்வாய் வழிவிடும். அடுத்த வாரத் தொடக்கத்தில், பாலத்தின் இடிபாடுகளை அகற்றும் பணி தொடரவிருப்பதால் அது மீண்டும் மூடப்படும்.
பால்ட்டிமோர் துறைமுகத்தின் சுமார் 15 மீட்டர் ஆழமுடைய முக்கியக் கால்வாய் அடுத்த மாதம் மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.