ஆஸ்திரேலியாவில் கூரிய ஆயுதத்தால் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய சிறுவன் – சுட்டு கொன்ற பொலிஸார்

ஆஸ்திரேலியாவின் பெர்த்தின் புறநகர் பகுதியான வில்லெட்டனில் 16 வயது சிறுவன் ஒருவன் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டான். பொதுமக்களை கத்தியால் குத்தி தாக்கினான்.
இதையறிந்ததும் பொலிஸார் அங்கு விரைந்தனர்.
அப்போது அந்த சிறுவன் கத்தியுடன் பொலிஸாரை நோக்கி வந்தான். அவனை கத்தியைக் கீழே போடுமாறும், சரண் அடையும்படியும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஆனால் அதற்கு மறுத்த சிறுவன் தொடர்ந்து தாக்குதல் நடத்த முயன்றதால் அவனை பொலிஸார் சுட்டனர்.
பின்னர் அவனை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் இறந்தான்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
(Visited 20 times, 1 visits today)