இலங்கை

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் சடலமாக மீட்பு

கண்டி, தெல்தோட்டை – லிட்டில்வெளி பகுதியிலுள்ள ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்பில் கலந்து கொண்டு மாணவன் புதன்கிழமை (11) வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.புதன்கிழமை (11)திகதி காணாமல் போன குறித்த சிறுவன், வியாழக்கிழமை (12) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

லிட்டில்வெலி தமிழ் வித்தியாலயத்தில் தரம் ஐந்தில் கல்வி கற்கும் சிறுவன், பாடசாலையில் மேலதிக வகுப்பினை முடித்துவிட்டு வீடு திரும்பிய வேளை, லிட்டில்வெலி ஓடையை கடக்கும் போது நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.இதனையடுத்து, கிராம மக்கள் இணைந்து தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்த போது காணாமல் போன இடத்திலிருந்து 5 கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பாலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளை கலஹா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

(Visited 10 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்