அமெரிக்காவில் காவல்துறையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சிறுவன்!
அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் தனது பாட்டியைக் கொன்ற 13 வயது சிறுவன் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட 68 வயதான பாட்டியின் உடல் அவர் வசித்த வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கொலைக்குற்றம் சாட்டப்பட்ட 13 வயது சிறுவன் அருகிலுள்ள காட்டுப் பகுதியில் மறைந்திருந்ததாக கூறப்படுகிறது.
காவல்துறை அதிகாரிகள் அவரை கைது செய்ய முயன்றபோது, சிறுவன் அதிகாரிகள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்தே காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், வட கரோலினா மாநில புலனாய்வுப் பிரிவு இந்த சம்பவம் குறித்து சிறப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(Visited 3 times, 4 visits today)




