எல்லைப் பிரச்சினை – வடகொரியாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் தென்கொரியா!
வடகொரியா மற்றும் தென்கொரியாவிற்கு இடையே அதிகரித்து வரும் எல்லை பதற்றங்களை தீர்ப்பதற்கும் பகிரப்பட்ட எல்லைக் கோட்டை தெளிவுபடுத்துவதற்கும் இராணுவ ரீதியாக பேச்சுவார்த்தைகளை நடத்த முன்மொழியப்பட்டுள்ளது.
இராணுவ எல்லைக் கோட்டின் குறுக்கே வட கொரிய வீரர்கள் ஊடுறுவியதை தொடர்ந்து தென்கொரிய இராணுவ வீரர்கள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டிருந்தனர்.
தென்கொரியாவின் மேற்படி குற்றச்சாட்டை வடகொரியா மறுக்கிறது. இந்நிலையிலேயே இராணுவ ரீதியான முறையான பேச்சுவார்த்தைகளுக்கு தென்கொரியா அழைப்பு விடுத்துள்ளது.
எவ்வாறாயினும் இந்த முன்மொழிவை வடகொரியா ஏற்குமா என்பது கேள்விக்குறிதான் என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
(Visited 1 times, 1 visits today)





