ஐரோப்பிய நாடுகளில் எல்லையில் ஏற்படும் தாமதத்தால் மில்லியன் கணக்கில் ஏற்படும் இழப்பு!

ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் இங்கிலாந்து பயணிகள் எல்லைகளில் நீண்ட வரிசையை சந்திப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் தாமதங்கள் பொருளாதாரத்திற்கு £400 மில்லியன் இழப்பை ஏற்படுத்தும் என்று தொழில்துறை அமைப்புகள் எச்சரித்துள்ளன.
கூடுதல் சோதனைகளை முடிக்க பயணிகள் “ஒன்று முதல் இரண்டு நிமிடங்கள் மட்டுமே எடுக்க வேண்டும் ” என்று உள்துறை அலுவலகம் கூறியிருக்கிறது.
இருப்பினும் “பரபரப்பான நேரங்களில் நீண்ட காத்திருப்பு” ஏற்பட வழிவகுக்கும் என்று அவ் அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது.
இந்நிலையில் சோதனைகளை மேற்கொள்ள நான்கு மணிநேரம் அவகாசம் வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சரக்கு போக்குவரத்து நிறுவனங்களுக்கு நீண்ட கால தாமதங்கள் மில்லியன் கணக்கான இழப்புகளையும் ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.