அமெரிக்காவில் எல்லை முகவர்களின் அட்டகாசம் – மேலும் இருவர் மீது துப்பாக்கிச்சூடு!
அமெரிக்காவின் மினியாபோலிஸில் (Minneapolis) கூட்டாட்சி முகவர் ஒருவர் பெண் ஒருவரை சுட்டுக் கொலை செய்த பிறகு நாடு முழுவதும் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் ஓரிகானின் போர்ட்லேண்டில் (Portland) எல்லை ரோந்து முகவர்கள் மேலும் இருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எல்லையில் சோதனையில் ஈடுபட்ட முகவர்கள் வாகனம் ஒன்றை நிறுத்தும்படி உத்தரவிட்டதாகவும், அவர்கள் தொடர்ந்து செல்ல முற்பட்ட நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும், சட்ட அமலாக்கப் பிரிவினர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளனர்.
மேற்படி துப்பாக்கிச்சூட்டில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ட்ரம்ப் முன்னெடுத்துள்ள கடுமையான குடியேற்ற கொள்கைகளால் இடம்பெறும் இவ்வாறான துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களை மனித உரிமை ஆர்வலர்கள் கண்டித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





