தெற்கு தாய்லாந்தில் காவல்துறை அதிகாரிகளை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் – 14 பேர் காயம்

தாய்லாந்தின் தெற்கு நாரதிவத் (Narathiwat) மாகாணத்தில் உள்ள ஒரு தேநீர்க் கடையின் முன் இன்று (16) காலை ஏற்பட்ட குண்டுவெடிப்பில் குறைந்தது 14 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையில் அப்பகுதியில் காவல்துறை அதிகாரிகள் ஒரு பணியை மேற்கொண்டு கொண்டிருந்தபோது குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகவும், மேலும் விசாரணைக்காக அந்தப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் காவல்துறை அதிகாரிகளை குறிவைத்து வீட்டில் தயாரிக்கப்பட்ட குண்டை வெடிக்கச் செய்ததாக புலனாய்வாளர்கள் நம்புவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(Visited 44 times, 1 visits today)