கிழக்கு காங்கோவில் மக்கள் முகாம்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் – 12 பேர் பலி
அரசாங்க அதிகாரிகள், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உதவிக் குழுவின் கூற்றுப்படி, கிழக்கு காங்கோ ஜனநாயகக் குடியரசில் இடம்பெயர்ந்த மக்களுக்கான இரண்டு முகாம்களைத் தாக்கிய இரட்டை குண்டுவெடிப்புகளில் குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
வடக்கு கிவு மாகாணத்தின் தலைநகரான கோமா நகருக்கு அருகில் உள்ள லாக் வெர்ட் மற்றும் முகுங்கா ஆகிய இடங்களில் உள்ள முகாம்களை குறிவைத்து வெடிப்புகள் நடந்ததாக ஐ.நா தெரிவித்துள்ளது.
குறைந்தது 20 பேர் காயமடைந்த இந்தத் தாக்குதல்கள், “மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களின் அப்பட்டமான மீறல் மற்றும் ஒரு போர்க் குற்றமாக இருக்கலாம்” என்று ஐ.நா தெரிவித்துள்ளது.
காங்கோ இராணுவமும் அமெரிக்காவும் அண்டை நாடான ருவாண்டாவில் உள்ள இராணுவம் மற்றும் M23 கிளர்ச்சிக் குழு தாக்குதல்களின் பின்னணியில் இருப்பதாக குற்றம் சாட்டின.