அமெரிக்காவில் விமானச் சக்கரப் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட சடலம்
அமெரிக்காவின் ஹவாயி மாநிலத்தின் காஹுலுய் விமான நிலையத்தில் தரையிறங்கிய யுனைட்டெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
சடலம் விமானத்தின் சக்கரப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
மாண்ட நபர், சக்கரப் பகுதிக்குள் எப்படி நுழைந்தார் என்பது தெரியவில்லை என்று United Airlines நிறுவனம் கூறியது. விமானத்தின் வெளிப்புறத்திலிருந்து மட்டும்தான் அதற்குள் செல்ல முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சிக்காகோ நகரின் ஓஹேர் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட Boeing 787-10 ரக விமானத்தில் சம்பவம் நேர்ந்தது.
சம்பவத்தை பொலிஸார் விசாரிக்கிறது என்று ஹவாய் நியூஸ் நவ் நிறுவனம் தெரிவித்தது. விமான நிலையம் வழக்கம்போல் செயல்படுகிறது.
(Visited 1 times, 3 visits today)