இலங்கையில் வனப்பகுதியில் இருந்து இனம்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
நுவரெலியா லவர்சீலிப் பகுதியிலுள்ள வனப்பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (14) செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
நுவரெலியா பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற தகவல்களுக்கமைய குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலம் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைவடைந்துள்ளதாகவும், உயிரிழந்தவரின் அங்க அடையாளங்களைக் கொண்டு 50 தொடக்கம் 60 வயதாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 15 times, 1 visits today)





