மட்டக்களப்பில் பாலம் ஒன்றிற்கு கீழ் மீட்கப்பட்ட ஆணின் சடலம்
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பார்வீதி பகுதியில் உள்ள சிறிய பாலம் ஒன்றிற்கு கீழ் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று காலை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

பார் வீதியில் உள்ள சிறிய பாலத்திற்கு கீழ் சுமார் 60வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.





