அருணாச்சலப் பிரதேசத்தில் காணாமல் போன 2வது கேரள சுற்றுலாப் பயணியின் உடல் மீட்பு
அருணாச்சலப் பிரதேசத்தின்(Arunachal Pradesh) தவாங்(Tawang) மாவட்டத்தில் உள்ள சேலா(Sela) ஏரியின் உறைந்த நீரில் தவறி விழுந்து கேரளாவைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள் வெள்ளிக்கிழமை நீரில் மூழ்கி இறந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஒருவரின் உடல் சம்பவ தினத்தன்றே மீட்கப்பட்டது, அதே நேரத்தில் இரண்டாவது சுற்றுலாப் பயணியைத் தேடும் பணிகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், காணாமல்போன இரண்டாவது சுற்றுலாப் பயணியின் உடல் தீவிர தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகு இன்று மீட்கப்பட்டுள்ளது.
முதலில் 26 வயது தினு(Dinu) என்பவர் மீட்கப்பட்டார், பின்னர் இன்று 24 வயது மகாதேவ்(Mahadev) மீட்கப்பட்டதை பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.
காவல்துறையின் கூற்றுப்படி, குழுவில் ஒருவர் உறைந்த ஏரியில் தவறி விழுந்து மூழ்கியுள்ளார். அவரை மீட்கும் முயற்சியில் தினுவும் மகாதேவும் ஏரிக்குள் குதித்துள்ளனர்.
மூன்றாவது சுற்றுலாப் பயணி பாதுகாப்பாக வெளியே வந்த நிலையில், தினுவும் மகாதேவும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.





