துனிசியாவில் படகு மூழ்கி விபத்து – 40 புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பு

துனிசியா (Tunisia) கடற்கரையில் துணை-சஹாரா (sub-Sahara) ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த 40 புலம்பெயர்ந்தோர் படகு மூழ்கியதில் உயிரிழந்துள்ளனர்.
இது இந்த ஆண்டு அப்பகுதியில் ஏற்பட்ட மிக மோசமான கடல்சார் துயரங்களில் ஒன்றாகும் என்று துனிசியா கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சுமார் 70 புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு, கடலோர நகரமான மஹ்தியா (Mahdia) அருகே மூழ்கியதாக துனிசியா கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
மோதல்கள் மற்றும் வறுமையிலிருந்து தப்பி ஐரோப்பாவில் சிறந்த வாய்ப்புகளைத் தேடும் புலம்பெயர்ந்தோருக்கு துனிசியா ஒரு முக்கிய போக்குவரத்து நாடாக அமைந்துள்ளது.
(Visited 4 times, 4 visits today)