தென் கொரியாவில் பாறையுடன் மோதி விபத்துக்குள்ளான படகு : பலர் மாயம்!
தென் கொரியாவின் தென்கிழக்கு கடற்கரையில் மணல் பாறையுடன் மோதி மீன்பிடி படகு ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து தொடர்பான அறிவிப்பை உள்ளூர் கடலோர காவல்படை மற்றும் தீயணைப்புத் துறைகள் தெரிவித்துள்ளன.
எட்டு பயணிகள், மூன்று தென் கொரியர்கள் மற்றும் ஐந்து இந்தோனேசிய நாட்டினர் பயணம் செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மாயமாகியுள்ளதாக கூறப்படுகிறது
காணாமல் போன பயணிகளைத் தேடுவதற்காக டஜன் கணக்கான அவசரகால தொழிலாளர்கள், 15 கடலோர காவல்படை கப்பல்கள் மற்றும் ஆறு ஹெலிகாப்டர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
(Visited 2 times, 1 visits today)