சுலவேசி தீவில் படகு விபத்து – 15 பேர் பலி!
இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் படகொன்று மூழ்கி விபத்துக்குள்ளாகியதில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து இன்று (24.07) அதிகாலை இடம்பெற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
குறித்த படகில் 40 பேர் பயணித்த நிலையில்இ அவர்களில் 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 19 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காணாமல்போனவர்களை தேடும் நடவடிக்கையில் மீட்பு பணியாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





