நான்காவது நாளில் வசூல் சரிவை சந்தித்த ப்ளடி பெக்கர்…
கவின், ராதா ரவி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான படம் ப்ளடி பெக்கர்.
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் வெளியாகியுள்ள முதல் படம் ப்ளடி பெக்கர்.
இந்தப் படத்தினை நெல்சன் திலீப்குமாரிடம் நீண்ட காலமாக உதவி இயக்குநராக பணியாற்றிய சிவபாலன் முத்துகுமார் ப்ளடி பெக்கர் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகியுள்ளார்.
படத்தில் கவின் பிச்சைக்காரராக நடித்துள்ளார். மேலும் இந்தக் கதாபாத்திரம் படம் தொடங்கி முதல் 30 நிமிடங்களுக்கு மட்டுமே இருக்கும் என்றாலும், அந்தக் கதாபாத்திரத்தில் சிறப்பாகவே நடித்து அசத்தியுள்ளார்.
குறைந்த அளவிலான தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி, ரிலீஸ் ஆன தியேட்டர்களில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் ப்ளடி பெக்கர். படத்தினைப் பொறுத்தவரையில் பெரிய அளவிலான லொகேஷன்கள் என எதுவும் இல்லை. படத்தின் 80 சதவீத காட்சிகள் ஒரு பெரிய பங்களாவில் மட்டுமே நடைபெறுகின்றது.
அந்தக் காட்சிகள் ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தவில்லை. மேலும் கவினின் நடிப்பு சில இடங்களில் புல்லரிக்கின்றது என ரசிகர்களே கருத்து தெரிவிக்கின்றனர். முதல் நாளில் ரசிகர்களின் விமர்சனங்களைக் கேட்டபின்னர், பொதுமக்கள் மத்தியில் ப்ளடி பெக்கர் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் வசூல் அதிகரித்துள்ளது.
படம் இதுவரை உலகம் முழுவதும் சுமார் 12 கோடிகள் வரை வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது. படத்தின் மொத்த பட்ஜெட்டே கிட்டத்தட்ட 10 கோடிகள் தான் எனக் கூறப்படும் நிலையில் படம் லாபங்களை வசூல் செய்ய ஆரம்பித்துவிட்டதாக பேச்சுகள் அடிபடுகின்றது.
ஆனால் படம் நான்காவது நாளில் வசூல் ரீதியாக சரிவைச் சந்தித்துள்ளது. நான்காவது நாளில் மட்டும் படம் உலகம் முழுவதும் சுமார் 1 கோடி வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகின்றது. இருப்பினும் படம் வசூல் ரீதியாக ஹிட் படமாக உருவெடுத்துள்ளது.