அமெரிக்காவை தாக்கும் பனிப்புயல் : வார இறுதியில் மக்கள் எதிர்நோக்கும் சவால்!
இந்த வார இறுதியில் தெற்கு அமெரிக்கா முழுவதும் பேரழிவை ஏற்படுத்தும் பனிப்புயல் வீசக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
டெக்சாஸிலிருந்து (Texas) கரோலினாஸ் (Carolinas) வரை நீண்டுகொண்டிருக்கும் இந்த நிகழ்வை பரவலான பேரழிவு நிகழ்வு” என்று நிபுணர்கள் விவரித்துள்ளனர்.
இதன்காரணமாக மின் இணைப்புகள் துண்டிக்கப்படும் எனவும், மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் விமான சேவைகள் இரத்து மற்றும் தாமதமடையும் எனவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மேலும் பனியை அகற்றுவதற்கு தேவையான உபகரணங்கள் குறைவாக உள்ளதாகவும் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.





