தாய்லாந்தில் மனைவிக்காக வீட்டு வாசலில் காத்திருந்த பார்வையற்ற கணவருக்கு அதிர்ச்சி

தாய்லாந்தில், பார்வையற்ற கணவர் வீட்டுக்கு வெளியே காத்திருந்தபோது, அவரது மனைவி வீட்டிற்குள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
53 வயதான தாய்லாந்து பெண், இரண்டு மாடி வீட்டில் உயிரிழந்ததாக Bangkok Post செய்தி வெளியிட்டுள்ளது.
அவரது கணவர் ஜெர்மனியைச் சேர்ந்தவராகும். கடந்த ஓராண்டாக இந்த தம்பதியினர் அந்த வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தனர்.
விபத்தில் கணவர் பார்வையை முழுவதுமாக இழந்தவர் என்பதால், மனைவியின் மரணத்தை அறிய முடியாமல், நீண்ட நேரம் அவருக்காக வீட்டுக்கு வெளியே காத்திருந்ததாகக் கூறப்படுகிறது. பெண் பேங்காக்கில் டெக்ஸி ஓட்டுநராக பணியாற்றினார்.
வீதி விபத்தொன்று தொடர்பில் தமது மனைவி 40,000 பாத் இழப்பீடு செலுத்தும் நிலையில் இருந்துள்ளார்.
எனினும் பெருந்தொகை பணம் எங்களிடம் இருக்கவில்லை. இதனால் அண்மையில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த மனைவி மிகவும் மன அழுத்தத்தில் இருந்ததாகக் கணவர் குறிப்பிட்டுள்ளார்.