எம்.ஜி.ஆர் 2.0 ஆக விஜயை கொண்டு வர பாஜக திட்டம்… சுடச்சுட
தமிழ்நாட்டில் பாஜக மெகா கூட்டணி அமைப்பதற்கான பணிகளை செய்து வருகிறது. விரைவில் இந்த கூட்டணி உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில்தான் நடிகர் விஜய்யை பாஜக தரப்பு அணுகுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதே சமயம், விஜயின் பெயரை இரண்டு அரசியல் கட்சிகளோடு தொடர்புபடுத்த வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு வெளியாகும் செய்திகள் எள்ளளவும் அறமற்ற பொய்யான செய்தி.
நடிகர் விஜயின் பெயரை உள்நோக்கத்தோடு அவரது அரசியல் நிலைப்பாடு என்று தொடர்புபடுத்தி துளியும் உண்மையில்லாத தகவல்களை கொண்டு வெளியாகும் செய்திக்கு மறுப்பை தெரிவிக்கிறோம் என்று விஜய் மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாக உள்ள லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டு உள்ளது. நேரு அரங்கில் நடக்க இருந்த விழா அதிக டிக்கெட் விற்பனை, போலி டிக்கெட் விற்பனை உள்ளிட்ட காரணங்களால் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
அதே சமயம் அவரின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு அரசியல் ரீதியாகவே அனுமதி கொடுக்கவில்லை. திமுக அரசுதான் இதை செய்கிறது என்று விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதற்காக #DMKFearsThalapathyVIJAY என்ற டேக்கையும் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
இதனால் விஜய் vs திமுக என்ற நிலை உள்ளது. ஏற்கனவே அதிமுக – விஜய் இடையே சர்க்கார் படத்தில் பிரச்சனை வந்தது. முன்பு ஜோசப் விஜய் பிரச்சனையில் பாஜக – விஜய் இடையே மோதல் இருந்தாலும்.. அதற்கு சமாதானம் சொல்லி அவரை கட்சிக்குள் கூட்டணி சேர்க்க அண்ணாமலை முயல இருக்கிறாராம்.
எப்போது வேண்டுமானாலும் அண்ணாமலை விஜய்க்கு போன் போடலாம் என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் கருணாநிதிக்கு சிம்ம சொப்பனமாக எம்ஜிஆர் இருந்தார்.. அதேபோல் ஸ்டாலினுக்கு எதிராக ரஜினியை கொண்டு வர பாஜக முயன்றது.
இந்த நிலையில்தான் எம்ஜிஆர் 2.0 ஆக விஜயை கொண்டு வர பாஜக திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
அதே சமயம், விஜயின் பெயரை இரண்டு அரசியல் கட்சிகளோடு தொடர்புபடுத்த வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு வெளியாகும் செய்திகள் எள்ளளவும் அறமற்ற பொய்யான செய்தி. நடிகர் விஜயின் பெயரை உள்நோக்கத்தோடு அவரது அரசியல் நிலைப்பாடு என்று தொடர்புபடுத்தி துளியும் உண்மையில்லாத தகவல்களை கொண்டு வெளியாகும் செய்திக்கு மறுப்பை தெரிவிக்கிறோம் என்று விஜய் மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.