பறவைக் காய்ச்சல்; ஆஸ்திரேலியாவில் மெக்டோனல்ட்ஸ் உணவகங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு
ஆஸ்திரேலியாவில் உள்ள மெக்டோனல்ட்ஸ் விரைவு உணவகங்கள் காலை உணவு நேரத்தைக் குறைத்துள்ளன.நாட்டில் பறவைக் காய்ச்சல் பரவிவருவதால், முட்டை விநியோகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதே அதற்குக் காரணம்.
“தற்போதைய சவால்கள் காரணமாக, நாங்கள் முட்டை விநியோகத்தைக் கவனமாக நிர்வகித்து வருகிறோம்,” என்று ‘மெக்டோனல்ட்ஸ் ஆஸ்திரேலியா’ வாடிக்கையாளர்களிடம் இந்த வாரம் கூறியது.
அதன் காரணமாக காலை உணவு நேரம், நண்பகலுக்குப் பதிலாக காலை 10.30 மணிக்கு நிறைவுபெறும் என்று அது தெரிவித்தது.
“மீண்டும் வழக்கநிலைக்குத் திரும்ப, நமது விநியோகிப்பாளர்களுடன் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்,” என்றும் அது சொன்னது.
விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் கிட்டத்தட்ட 12 கோழிப் பண்ணைகளில் ‘எச்7’ பறவைக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பண்ணைகளில் உள்ள கோழிகள் கொல்லப்பட்டதாக அரசாங்கம் கூறியது.