ஆஸ்திரேலியாவில் சிறுமியின் கண் பார்வையைப் பறித்த பறவை
ஆஸ்திரேலியாவில் பறவை ஒன்றின் தாக்குதலுக்கு உள்ளான சிறுமி ஒருவர் கண்பார்வையை இழந்துள்ள துயரச் சம்பவம் பதிவாகி உள்ளது.
மேற்கு ஆஸ்திரேலியாவில் 12 வயதான பாடசாலை மாணவியை பறவை ஒன்று தாக்கியுள்ளது.
இதன் காரணமாக அவரின் கண்ணில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், 18 மாதங்கள் கடந்த போதும் இன்னும் குணமடையவில்லை என பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.
பாடசாலையில் இருந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 8 தடவைகள் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட போதும் இன்னும் கண்பார்வை வழமைக்கு வரவில்லை என மாணவியின் தாய் தெரிவித்துள்ளார்.
பறவையின் தாக்குதலுக்கு உள்ளான மாணவி உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை வழங்கப்பட்ட போதும், இன்னும் குணமடையவில்லை என்பது பெற்றோருக்குப் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை வெளியில் செல்லும் பிள்ளைகளைப் பெற்றோர் மிகுந்த அவதானத்துடன் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.




