இந்தியாவிற்கு வருகை தந்தார் பில்கேட்ஸ்!

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும், மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் இந்தியா வந்துள்ளார்.
நாட்டின் முன்னணி அரசியல்வாதிகள் மற்றும் வர்த்தகர்களை அவர் சந்தித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அங்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பில்கேட்ஸ் சந்தித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச் சந்திப்பில் செயற்கை நுண்ணறிவின் ஆற்றலை மக்களின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்துவது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்த சந்திப்பு குறித்து தனது எக்ஸ் கணக்கில் ஒரு குறிப்பை வைத்து, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் துறைகளைப் பற்றி விவாதிப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
(Visited 11 times, 1 visits today)