பொழுதுபோக்கு

கனி – பிரவீன் செய்த மோசமான செயல் – அதிர்ச்சியில் ஹவுஸ் மேட்ஸ்

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 ஆரம்பிக்கப்பட்டு சண்டையும் சமாதானமும் அழுகையும் சிரிப்புமாக சென்றுகொண்டு இருக்கின்றது.

இன்று ஐந்தாவது நாளாக பிக்பாஸ் ஒளிபரப்பப்பட்டுக்கொண்டு இருக்கின்றது. இன்றைய நாளில் முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது.

இதில் கனி மற்றும் பிரவீன் காந்தி இருவரும் சேர்ந்து இன்றைய சமையலில் உப்பை அதிகமாக போட்டுவிட்டார்கள்.

இதையடுத்து கெமரா முன் போய் நின்று “நாங்க ரெண்டு பேரும் தெரிஞ்சேதான் உப்பு அதிகமாப் போட்டு இருக்கோம். சாப்பாடு இல்லை என்றால் எப்படி இருக்கும் என்பதை தெரியப்படுத்தவே இப்படி செய்தோம்” என்று கூறிவிட்டனர்.

ஹவுஸ்மேட்ஸ் சமையலை ருசி பார்த்த பிறகு உப்பு அதிகமாக இருக்கின்றது ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டு பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.

எப்போதும் அமைதியாக இருக்கும் ஆதிரை, திடீரென “நீங்க ஒண்ணு பண்றீங்கன்னா, அதைச் சரியாக பண்ணணும்”னு கேட்டபோது, பிரவீன் காந்திக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் வெடித்தது.

இது தொடர்பான வீடியோ இதோ…

 

(Visited 3 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்