திடீரென வெளிவந்த அமீர்கான் போஸ்டர் – வார் 2 படத்தால் கூலிக்கு ஏற்பட்ட சிக்கல்

லோகேஷ் கனகராஜ், சன் பிக்சர்ஸ் கூட்டணிகள் கூலி படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த், நாகர்ஜுனா, அமீர்கான் போன்ற மிகப்பெரிய பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 14ஆம் தேதி தியேட்டரில் வெளியாக இருக்கிறது.
இப்போதே படத்திற்கான பிசினஸ் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. இந்த சூழலில் எதிர்பாராத விதமாக அமீர்கானின் போஸ்டர் அண்மையில் வெளியானது. தஹா கதாபாத்திரத்தில் அமீர்கான் நடிப்பதாக வெளியான போஸ்டர் இணையத்தில் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது.
எந்த அறிவிப்பும் இல்லாமல் அவசரமாக இந்த போஸ்டர் வெளியிடுவதற்கான காரணம் தெரியவந்துள்ளது. அதாவது ஆகஸ்ட் 14ஆம் தேதி பான் இந்தியா படமாக கூலி படம் ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது.
இதே நாளில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ரித்திக் ரோஷன் நடிப்பில் உருவாகி இருக்கும் வார் 2 படமும் வெளியாகிறது.
இந்த படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
வார் 2 தயாரிப்பாளர் ஐமேக்ஸ் திரையரங்குகளை கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு இந்தப் படத்தை வெளியிட வேண்டும் என்பதற்கான முயற்சியில் இறங்கி இருக்கிறார்.
மிகவும் எதிர்பார்ப்பு இருப்பதால் இந்த படத்தை ஐமேக்ஸ் தியேட்டர் உரிமையாளர்களும் வெளியிட முன் வந்திருக்கின்றனர்.
இப்படிப்பட்ட நிலையில் அமீர்கான் போஸ்டர் வெளியிட்டால் கூலி படத்திற்கும் ஒன்று அல்லது இரண்டு தியேட்டர்கள் கிடைக்கும் என்ற நிலையில் கூலி படக்குழு செயல்பட்டு இருக்கிறது. ஆகையால் ஆகஸ்ட் 14ஆம் தேதி ஒரு கடுமையான போட்டி நிலவ இருக்கிறது.