“பிக்பாஸ்” ஆரம்பமாகும் திகதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன் எப்போது தொடங்கும் என்பதை விஜய் டிவி அறிவித்து உள்ளது.
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் யார் யாரெல்லாம் கலந்துகொள்ளப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு ஒரு புறம் இருக்க, மறுபுறம் அந்நிகழ்ச்சி எப்போது ஆரம்பமாகும் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிகவும் ஆவலோடு இருக்கிறார்கள்.
இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கும் தேதியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அதன்படி வருகிற அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அக்டோபர் மாதம் தொடங்கும் இந்நிகழ்ச்சி 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையுடன் முடிவுக்கு வரும்.
பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதை தொகுத்து வழங்கும் நடிகர்களுக்கு அதிகளவில் சம்பளம் வாரி வழங்கப்படும். இதற்கு முன்னர் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கினார்.
பின்னர் வந்த விஜய் சேதுபதிக்கு கடந்த சீசனை தொகுத்து வழங்க ரூ.50 கோடி சம்பளமாக வழங்கப்பட்டது. இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சிக்காக அவர் தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார். அதன்படி இந்த சீசனுக்காக விஜய் சேதுபதிக்கு ரூ.75 கோடி சம்பளமாக வழங்கப்பட உள்ளதாம்.