தைவானுக்கான $571 மில்லியன் மதிப்பிலான ராணுவ உதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ள பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தைவானுக்கு US$571.3 மில்லியன் (S$774.5மி.) மதிப்பில் ராணுவ உதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகை வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) வெளியிட்ட ஓர் அறிக்கையில், தைவானுக்கு உதவ அமெரிக்கத் தற்காப்பு அமைச்சிலிருந்து US$571.3 மில்லியன் வரை மதிப்பிலான தற்காப்புச் சேவை, ராணுவக் கல்வி, பயிற்சியை வழங்க வெளியுறவு அமைச்சருக்கு பைடன் ஒப்புதல் அளித்ததாகத் தெரிவித்தது.
ராணுவ உதவித் திட்டம் குறித்த மேல்விவரங்களை அந்த அறிக்கை வழங்கவில்லை. கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு முன்பு இதேபோன்று தைவானுக்கு US$567 மில்லியன் மதிப்பில் ராணுவ உதவி வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்திருந்தது.
தைவானுக்கு மற்ற நாடுகள் ஆதரவு தந்துள்ளது குறித்து கோபம் கொண்டுள்ள சீனா, தனது விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளது.