“சூனியம் வைக்கப்பட்டுள்ளது – தயவு செய்து செய்யாதீர்கள் …” : யாழில் நடத்த சுவாரஸ்ய சம்பவம்!
யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது வீட்டின் முன் குப்பைகளை கொண்ட கூடாது என்பதற்காக காட்சிப்படுத்திய போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த நபரின் வீடு வீதியோரமாக அமைந்துள்ளது. இந்நிலையில் பலர் அந்த வீதியில் குப்பைகளை கொட்டிச்சென்றுள்ளனர்.
இதனால் பல கஸ்டங்களை அனுபவித்த அவர் இறுதியில் பொறுமை இழந்து வீட்டின் வாயில் பகுதியில் பதாகை ஒன்றை காட்சிப்படுத்தியுள்ளார்.
அதில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக விபத்து ஏற்படும். ஆகவே தயவு செய்து குப்பைகளை கொட்டாதீர்கள் என எழுதியுள்ளார்.
இதனையடுத்து குறித்த பகுதியில் யாரும் குப்பைகளை கொட்டவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.





