இந்தியா அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்த பெஞ்சமின் நெதன்யாகு

ஜெருசலேமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 12 பேர் காயமடைந்தனர்.
இது குறித்து, பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்ததை அடுத்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Xல் இஸ்ரேல் பிரதமரின் அதிகாரப்பூர்வ கணக்கில், பயங்கரவாதம் அனைவரையும் அச்சுறுத்தும் ஒரு சாபக்கேடு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இஸ்ரேலுடன் இணைந்து நின்று, நம் அனைவரையும் அச்சுறுத்தும் பயங்கரவாதத்தின் கொடுமைக்கு எதிராக நின்றதற்கு பிரதமர் @narendramodi அவர்களுக்கு நன்றி” என்றும் பதிவிட்டுள்ளார்.
ஜெருசலேமில் அப்பாவி பொதுமக்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதலை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாகக் கண்டித்துள்ளார், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து, காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்தனை செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.
Xல் ஒரு பதிவில், பிரதமர் மோடி, “ஜெருசலேமில் அப்பாவி பொதுமக்கள் மீதான கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம். இந்தியா பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் கண்டிக்கிறது மற்றும் பயங்கரவாதத்திற்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.