ஸ்கிப்பிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள்!
நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி மிக அவசியமானது இதற்காக நாம் ஒரு மணி நேரமாவது ஒதுக்க வேண்டும் ஆனால் இந்த ஸ்கிப்பிங் பயிற்சி செய்வதற்கு மிகக் குறைந்த நேரமும் அதிக பயன்களையும் பெற முடியும் அது என்னவெல்லாம் என்று ஸ்கிப்பிங் யாரெல்லாம் செய்யக்கூடாது என்பது பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஸ்கிப்பிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள் :
தினமும் ஸ்கிப்பிங் செய்யும் போது குறுகிய காலத்தில் நம் உடலில் அனைத்து பாகங்களிலும் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்கலாம். இதனால் தொப்பையும் குறையும். உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் இந்த பயிற்சியை தினமும் செய்து வரலாம்.
ஸ்கிப்பிங் செய்வதன் மூலம் இதயத்துடிப்பை வலு படுத்துகிறது. மேலும் எலும்புகளை வலுப்பெற செய்கிறது.ஆஸ்டியோபோரோசிஸ் வருவதை தடுக்கலாம் .
தொப்பையை குறைப்பதோடு மட்டுமல்லாமல் நம்முடைய கான்சன்ட்ரேசன் பவரை அதிகப்படுத்துகிறது உடல் கட்டுக்கோப்பு மற்றும் மன ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது.
கூன் விழுதல் தடுக்கப்படுகிறது தண்டுவடம் நேராகி உயரமான தோற்றத்தை பெற முடியும். குழந்தைகள் உயரமாக வளர இந்த பயிற்சியை மேற்கொள்ள சொல்லலாம்.
ஸ்கிப்பிங் மேற்கொள்வதற்கு முன்பு செய்ய வேண்டியவை:
முதலில் மெதுவாக ஆரம்பிக்க வேண்டும் எடுத்த உடனே வேகமாக குதிக்க கூடாது. மேலும் ஸ்கிப்பிங் இல் பல வகையான அவைகள் உள்ளது இதை முறையாக நன்கு பயிற்சி எடுத்த பிறகு மற்ற முறைகளை மேற்கொள்ள வேண்டும்.
புல்வெளி மற்றும் மணல் பகுதிகளில் செய்வது நல்லது. குறைவான ஆகாரத்தை எடுத்துக்கொண்டு சிறிது நேரம் கழித்து உடற்பயிற்சி செய்யலாம்.
நீங்கள் பயன்படுத்தும் கயிறுகள் தரமானதாகவும் உங்களுக்கு ஏற்ற கயிறுகளாகவும் இருக்க வேண்டும்.
செய்யக்கூடாதவைகள் மற்றும் தவிர்க்க வேண்டியவர்கள்:
அதிகமான ஆகாரங்களை எடுத்துக்கொண்டு ஸ்கிப்பிங் செய்யக்கூடாது. கான்கிரீட் போன்ற கடினமான தரைகளில் செய்வதை தவிர்க்கவும்.
முழங்கால் வலி ,தசைப்பிடிப்பு, முதுகு வலி போன்ற உடலில் ஏதேனும் பிரச்சனை உள்ளவர்கள் செய்யக்கூடாது. கர்ப்பிணிப் பெண்களும் தவிர்க்கவும். சிசேரியன் செய்த பெண்கள் மற்றும் இதய நோயாளிகள் மருத்துவரை ஆலோசித்து முயற்சிக்கவும்.
ஆகவே குறுகிய காலத்தில் குறைந்த நேரத்தில் உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க நினைப்பவர்களுக்கு ஸ்கிப்பிங் மிகப் பயனுள்ளதாக இருக்கும்.