தினமும் முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு மிகவும் ஆரோக்கியமான மற்றும் எந்தவித பக்கவிளைவு இல்லாத உணவு என்றால் அது முட்டை தான்.
அதன்படி சைவ உணவு உண்பவர்கள் கூட முட்டையை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். அந்த அளவிற்கு முட்டையில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது.
முட்டையை ஆம்லெட்டாகவோ அல்லது அவித்தோ சாப்பிடலாம். ஆனால் இதில், முட்டையை தண்ணீரில் வேக வைத்து சாப்பிட்டால் தான் அதிக அளவு நன்மைகள் கிடைக்கிறது.
அதன்படி தினமும் முட்டை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் நாம் காணலாம்.
முட்டையின் மஞ்சள் கரு சாப்பிடுவதால் கண் புரை, மிக வேகமாக வயதாகும் நிலை போன்றவற்றை குறைக்க பயன்படுகிறது. மேலும் உடலில் அதிக அளவு கொழுப்பு உள்ளவர்கள் சுடு தண்ணீரில் வேக வைத்த முட்டையின் வெள்ளை மட்டும் சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும்.
மேலும் ரத்த அழுத்தம் போன்ற உடல்நிலை பாதிப்புகள் உள்ளவர்கள் தினமும் வேகவைத்த முட்டையை சாப்பிடுவது தீர்வு கொடுக்கும்.
குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு தினமும் வேகவைத்த முட்டை கொடுப்பது அவர்களின் செல் வளர்ச்சிக்கும், மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது.
நீரில் வேகவைத்த முட்டையில் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் இருப்பதால் நம்முடைய வளர்ச்சி நிலை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. அதன்படி உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் தினமும் முட்டையை சாப்பிட்டால் நல்ல தீர்வு கிடைக்கும்.
முட்டையில் அதிக அளவு ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உள்ளது. இது கண்களை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. முட்டை சாப்பிடுவதால் கண் சம்பந்தப்பட்ட அனைத்து விதமான நோய்களையும் குணப்படுத்த உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.