வாழ்வியல்

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

தண்ணீர் நம்முடைய உடலுக்கு மிக முக்கியமான தாதுக்களில் ஒன்றாகும். தினமும் போதுமான அளவு தண்ணீர் அருந்தவில்லை என்றால் நமது உடலில் நீர் சத்து குறைந்து பல்வேறு விதமான நோய்கள் வருவதற்கு காரணமாக அமையும். அப்படிப்பட்ட சூழ்நிலையை தவிர்ப்பதற்கு உடலில் ஒருபோதும் நீர் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், நமது உடலில் இருக்கக்கூடிய பல்வேறு பாக்டீரியாக்கள், கிருமிகளை வெளியேற்றுவதற்கு உதவிகரமாக இருக்கும். இரவில் நமது வாயில் குவிந்திருக்கக்கூடிய பாக்டீரியாக்கள், நமது குடலுக்குள் போகும். இதனால் நமது உடல் பலவீனமாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தால், குடல் இயக்கம் மேம்படும். அதன்மூலம் உடலில் இருக்கக்கூடிய பல்வேறு விதமான கிருமிகள் வெளியேற்றப்படுவதால, மெட்டபாலிசம் வளர்ச்சதை அதிகரிக்கப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. இதனால் நமக்கு வரக்கூடிய நோய்களையும் குணப்படுத்திக் கொள்ளலாம். சீசனுக்கு ஏற்ப புதுசா வரக்கூடிய பாக்டீரியா வைரஸ் போன்ற தொற்று வியாதிகளை வராமல் தடுத்து நலமோடு வாழலாம். அதுக்கு காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது அவசியம்.

கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீரை குடிக்கிறதும் நமக்கு ஆரோக்கியம் தான். இத்நால் மலம் கழிப்பது எளிதாகும். காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் போது வயிற்றிலிருந்து மலம் வேகமாக வெளியேற ஆரம்பிக்கும். சுலபமாக மலம் கழிக்கலாம் சீரற்ற குடல் இயக்கம், கடுமையான மலச்சிக்கல் போன்ற பிரச்சனை எல்லாம் இருக்காது. எனவே மலம் வெளியேறுவது எளிதாகுவதால் உங்களுக்கு குடல் ஆரோக்கியம் மேம்பட ஆரம்பிக்கும். இதன்மூலம் செரிமானமும் ஆரோக்கியமாக இருக்கும்.

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், சருமத்தை பொழிவாக்குகிறது. வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் போது உடலில் உள்ள தீங்கு விளைவிக்கக் கூடிய நச்சுக்களை வெளியேற்றுகிறது. அதாவது ரத்தத்தில் இருக்கக்கூடிய நச்சுக்கிருமிகளும், உடல் உறுப்புகளில் இருக்கக்கூடிய கழிவுகளும் கொழுப்புகளும் வெளியேற்றப்படும். இதனால் சருமம் பொலிவாக ஆரம்பிக்கும். கிருமிகள் இல்லாத சருமம் பளபளப்பாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும். சருமத்தில் எந்த விதமான தோல் சுருக்கங்கள், முகப்பருக்கள், கரும்புள்ளிகள் என எதுவுமே இருக்காது.

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்கிறது பல் சிதைவை தடுப்பதற்கு உதவியாக இருக்கிறது. பல் துவாரங்கள் அல்லது பல் சொத்தை போன்ற பல்வேறு பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது. காலையில் எழுந்ததும் பற்களை துலக்கிய பிறகு, வெறும் வயிற்றில் கொஞ்சம் வெதுவெதுவென இருக்கக்கூடிய தண்ணீர் குடிக்கும் போது நன்மைகள் கிடைக்கும்.

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் முன்பாக நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய முக்கியமானது எதுவென்றால், வெறும் வயிற்றில் மிகவும் சூடான தண்ணீரை குடிக்க கூடாது. வெதுவெதுப்பான தண்ணீர் மட்டும் தான் குடிக்க வேண்டும்.

அதுமட்டுமில்லாமல் தண்ணீருக்கு பதிலாக ஒருவேளை டீ அல்லது காபி குடித்தால், உங்களுக்கு வயிற்று புருணையில் எரிச்சலலை ஏற்படுத்தும். குமிட்டல் உணர்வு தோன்றலாம். அசிடிட்டி தன்மை அதிகமாகி நெஞ்சரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. டீ அல்லது காபி குடிப்பது தவறு இல்லை. ஆனால் அதை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டாம். எனவே காலையில் வெறும் வயித்தில் வெதுவெதுப்பான தண்ணீர் மட்டும் தான் குடிக்க வேண்டும். இதன்மூலம் பல்வேறு மருத்துவ நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். நீங்களும் ஆரோக்கியமாக இருக்கலாம்.

(Visited 15 times, 1 visits today)

SR

About Author

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான