செய்தி வாழ்வியல்

காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

வெதுவெதுப்பான நீர் குடிப்பதால் கிடைக்கும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் தெரிந்துகொண்டு உங்கள் உடலை என்றும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

குறிப்பாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் ஏற்படும் தொற்று நோய்கள் வெகுவாக பரவி வருகிறது. இதிலிருந்துப் பாதுகாத்துக் கொள்ள உங்களால் முடிந்த அளவுக்கு உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும்.

தினசரி காலையில் வெந்நீர் குடிப்பதால் உங்கள் குடல் ஆரோக்கியமாக செரிமானமாகும். அன்றாடம் உணவு சாப்பிடும் முன்பும் அதற்குப் பின்பும் வெந்நீர் குடிக்கும் பழக்கத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

மாறிவரும் காலநிலை சூழ்நிலைக்கேற்ப உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கத் தினசரி காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெதுவான நீர் குடிக்க வேண்டும்.

தினசரி காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெந்நீரில் எலுமிச்சை சாற்றைக் கலந்து குடித்து வாருங்கள். இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

நீங்கள் அசிடிட்டியால் பாதிக்கப்பட்டிருந்தால் தினசரி காலையில் வெந்நீரைக் குடித்து வாருங்கள். அசிடிட்டி என்பது அமிலத்தன்மை வயிற்றுக் கோளாறுகளால் ஏற்படுகிறது. தினசரி காலையில் வெந்நீர் குடித்து வந்தால் அமிலத்தன்மையிலிருந்து விடுபடலாம்.

செம்பு அல்லது வெள்ளி பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் உங்கள் உடலுக்கு போதுமான தாதுகள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதைத் தவிர்த்து விடுங்கள். காலையில் மற்றும் அனைத்து நேரத்திலும் வெந்நீர் குடிக்கும் பழக்கத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

தண்ணீர் உடலுக்கு நல்லது என்றாலும் போதுமான அளவு மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும். அதிகமான தண்ணீர் குடிப்பதாலும் சிறுநீரகம் பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. தாகம் எடுக்கும் நேரத்தில் மட்டும் தண்ணீர் குடிக்கவும்.

அன்றாடம் காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பது அவசியம். குறிப்பாக வெந்நீர் குடிப்பதால் உடலுக்குப் புத்துணர்வு கிடைக்கும் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

(Visited 4 times, 4 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி