ஜார்க்கண்டில் 17 வயது சிறுமியின் தலை துண்டிக்கப்பட்ட உடல் கண்டுபிடிப்பு
ஜார்க்கண்டின்(Jharkhand) தும்கா(Dumka) மாவட்டத்தில் தலை துண்டிக்கப்பட்ட 17 வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி சரியாஹத்(Sariyahat) காவல் நிலைய எல்லைக்குள் உள்ள திகி(Dighi) கிராமத்தில் வசிப்பவர் என்று அடையாளம் கண்டுள்ளனர்.
இந்நிலையில், “எங்கள் முதற்கட்ட விசாரணையின்படி, இது ஒரு திட்டமிட்ட கொலையாகத் தெரிகிறது. பாதிக்கப்பட்டவருக்கு மிக நெருக்கமானவர்களால் இது செய்யப்பட்டிருக்கலாம். மேலும் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது” என்று சரியாஹத் காவல் நிலைய பொறுப்பாளர் ராஜேந்திர குமார் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவரின் தந்தை நவம்பர் 4ம் திகதி காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தனது மகளுடன் ஓடிப்போனதாகக் கூறப்படும் இரண்டு இளைஞர்களை சந்தேக நபர்களாகக் தெரிவித்துள்ளார்.
(Visited 2 times, 2 visits today)




