கனடாவில் கரடிகள் அட்டகாசம் – பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் படுகாயம்!
கனடாவின் (Canada) பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia) மாகாணத்தில் பாடசாலை குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களை கிரிஸ்லி கரடி (grizzly bear ) தாக்கியுள்ளது.
இதில் 11 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வான்கூவரில் (Vancouver) இருந்து வடமேற்கே 700 கிலோமீட்டர் (435 மைல்) தொலைவில் உள்ள பெல்லா கூலாவில் (Bella Coola) நேற்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று முழுவதும் குறித்த பகுதியில் கரடியின் நடமாட்டம் இனங்காணப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆயுதம் ஏந்திய காவல்துறையின் சம்பவ இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் மக்கள் வீட்டுகுள் இருக்க வேண்டும் எனவும், நெடுஞ்சாலைக்கு செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
(Visited 2 times, 3 visits today)




