வாழ்வியல்

அளவுக்கு அதிகமாக வியர்த்தால் அவதானம்

உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க வியர்வை பங்கு இன்றியமையாத ஒன்று. அந்தவகையில் சிலருக்கு மன அழுத்தம், உடற்பயிற்சி, சுரப்பி மாற்றங்கள், மது அருந்துதல் மற்றும் மருந்துகள் சாப்பிடுபவர்கள் ஆகியோருக்கு வியர்வை வரும் என்று கூறுபடுகிறது.

உடலில் அதிகமான வெப்பம் இருந்தால் அதனைக் குறைக்க வியர்வை வரத் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது. வியர்வை என்பது நம் உடலில் இருக்கும் தண்ணீர் மற்றும் பிற சோடியம் போன்ற பிற தாதுகள் வியர்வையை உற்பத்தி செய்து இறுதியில் வியர்வை தோலில் உண்டாகும் என்று சொல்லப்படுகிறது.

வியர்வை உடலில் இருக்கும் தகாத நச்சு பாக்டீரியாக்கள் மற்றும் பிற கிருமிகளை வெளியேற்ற உருவாகும். மேலும் இது உடலை ஆரோக்கியப்படுத்தி சருமத்தை ஆரோக்கியமாக்குகிறது.

அதிக பதட்டம் மற்றும் அதிகமான மன அழுத்தம் உணரும் போது பதட்டத்தில் வியர்வை உண்டாகும். உடலில் ஏற்படும் வியர்வை துர்நாற்றமாக மாறி அது நோய்த் தொற்றாக உருவாகும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உடற்பயிற்சி செய்யும்போது உடலில் அதிகமான வியர்வை சுரக்கும். இது உடலில் சோடியத்தை குறைக்கும் என்று கூறப்படுகிறது.

காஃபின் இது வியர்வையைச் சுரக்கும் சுரப்பி செயல்பாடுகளை அதிகரிக்கிறது. இதனால் காபி குடிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு அதிகமான வியர்வை சுரப்பதைக் காணலாம். அப்படி அதிகமான வியர்வை சுரப்பதை அறிந்தால் காபி குடிக்கும் பழக்கத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

பொதுவாக வியர்வை சாதாரணமாக வரும். அதே அதிகமாக வந்தால் உடலுக்கு நீரிழிவு நோய், தைராய்டு செயலிழிப்பு, இதய நோய் மற்றும் மாதவிடாய் போன்றவற்றில் சில பிரச்சனைகள் வரலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான