வெயிட்டான சம்பளத்தோடு வெளியேறிய மஞ்சரி – ராணவ் ; எவ்வளவு தெரியுமா?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கடத்த அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி துவங்கிய இந்த நிகழ்ச்சியில், முதல் நாளே மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டு விளையாடத் துவங்கினர்.
இந்த முறை வைல்டு கார்டு சுற்று மூலம் உள்ளே வந்த ராணவ் மற்றும் மஞ்சரி ஆகியோர் தான் வெளியேற்றப்பட்டுள்ளனர். மீதம் 8 போட்டியாளர்கள் பிக் பாஸ் டைட்டிலை வெல்ல தொடர்ந்து போராடி வருகின்றனர்.
அந்த வகையில் டாப் 8 கண்டெஸ்டெண்ட் லிஸ்டில், தீபக், பவித்ரா, விஜய் விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் மற்றும் ராயன் ஆகியோர் உள்ளனர்.
இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய, ராணவ் மற்றும் மஞ்சரி வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஒரு சிங்கிள் மதராக இருந்து, தன்னுடைய குழந்தை மற்றும் குடும்பத்தை காப்பாற்றி வரும் மஞ்சரி ஒரு பேச்சாளராக பிரபலமானவர்.
இவர் ஒரு நாளைக்கு ஒரு நாளைக்கு 15 முதல் 18 ஆயிரம் வரை சம்பளமாக வாங்கியதாக கூறப்படும் நிலையில், 63 நாட்களுக்கு 10 முதல் 12 லட்சத்திற்குள் சம்பளம் பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
அதேபோல் ஏற்கனவே சில திரைப்படங்களில் நடித்துவிட்டு, ஹீரோவாக வேண்டும் என்கிற கனவோடு பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தவர் தான் ராணவ், இவரும் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த நிலையில், இவருக்கு சம்பளமாக 20 முதல் 22 ஆயிரம் வரை வழங்கப்பட்டுள்ளது. இவர் 12 முதல் 15 லட்சத்திற்குள் சம்பளமாக பெற்றுவதாக கூறப்படுகிறது. பிக் பாஸ் வீட்டிற்குள் லேட்டாக வந்தாலும் வெயிட்டான சம்பளத்தோடு தான் இருவரும் வெளியேறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.