பாசிச ஆட்சிக்கு முடிவு – பங்காளதேஷில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் ஆரம்பம்
2024 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொடிய எழுச்சிக்குப் பிறகு, பங்காளதேஷ் நாடாளுமன்றம் முதன் முறையாகக் கூடியது.
“ஒன்றரை தசாப்தத்திற்கும் மேலான பாசிச மற்றும் அடிபணிந்த ஆட்சிக்குப் பிறகு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் நாடாளுமன்ற நடவடிக்கைகள் இன்று தொடங்குகின்றன,” என புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் தாரிக் ரஹ்மான் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பங்காளதேஷ் தேசியவாதக் கட்சி (BNP) ஒரு வளமான, பாதுகாப்பான மற்றும் ஜனநாயக நாட்டைக் கட்டியெழுப்ப விரும்புகிறது,” என்றும் அவர் கூறினார்.
அனைத்து அரசியல்வாதிகளும், அவர்களின் அரசியல் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும், ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
நூற்றுக்கணக்கானவர்களைக் கொலை செய்த அடக்குமுறைக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட ஷேக் ஹசீனாவின் கவிழ்க்கப்பட்ட அரசாங்கத்தையும், முந்தைய நாடாளுமன்றத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தியதற்காக அவரது அவாமி லீக் கட்சியையும் ரஹ்மான் குற்றம் சுமத்தினார்.
வீழ்ச்சியடைந்த சர்வாதிகாரம் பாராளுமன்றத்தை அனைத்து தேசிய நடவடிக்கைகளின் மையமாக மாற்றுவதற்குப் பதிலாக செயலிழக்கச் செய்தது, என்று ரஹ்மான் கூறினார், அது தனது கண்காணிப்பின் கீழ் மாறும் என்றும் உறுதியளித்தார்.
நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்ட அனைத்து விவாதங்கள் மற்றும் வாதங்களின் மையமாக நாடாளுமன்றத்தை மாற்றுவோம்
என்றும் கூறினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, இந்த எழுச்சியில் சுமார் 1,400 பேர் கொலை செய்யப்படடனர். மற்றும் 20,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.





