மருத்துவமனையில் குணமடைந்து வரும் வங்கதேச கிரிக்கெட் வீரர் தமீம் இக்பால்

உள்நாட்டு போட்டியின் போது ஏற்பட்ட மாரடைப்பால், பங்களாதேஷ் அணியின் முன்னாள் கேப்டன் தமீம் இக்பால் சுயநினைவு பெற்று, குடும்பத்தினரிடம் பேசி வருவதாக கிரிக்கெட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
50 ஓவர்கள் கொண்ட டாக்கா பிரீமியர் டிவிஷன் கிரிக்கெட் லீக் (DPL) போட்டியில் முகமதியன் ஸ்போர்டிங் கிளப்பை வழிநடத்திச் சென்ற 36 வயதான தமீம், கடுமையான மார்பு வலி ஏற்பட்டதால் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
“அவர் இப்போது நலமாக உள்ளார். அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் பேசினார்” என்று கிளப் அதிகாரி தாரிகுல் இஸ்லாம் தெரிவித்தார்.
முகமதியன் பிசியோதெரபிஸ்ட் எனாமுல் ஹக், தமீமின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், விரைவில் வேறு மருத்துவ வசதிக்கு மாற்றப்படுவார் என்றும் குறிப்பிட்டார்.
(Visited 2 times, 1 visits today)