இந்தியா விளையாட்டு

லக்னோ அணிக்கு இலகுவான வெற்றியிலக்கை நிர்ணயித்த பெங்களூர்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று லக்னோவில் நடைபெறும் ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடுகின்றன.

டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்களாக விராட் கோலி, கேப்டன் டூ பிளசிஸ் சிறப்பான துவக்கம் அளித்தனர். விராட் கோலி 31 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

டூ பிளசிஸ் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தார். மறுமுனையில் அனுஜ் ராவத் 9 ரன்னிலும், கிளென் மேக்ஸ்வெல் 4 ரன்னிலும், பிரபுதேசாய் 6 ரன்னிலும் அவுட் ஆகினர்.

15.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

மழை நின்றதும் போட்டி தொடங்கியது. தொடர்ந்து ஆடிய டூ பிளசிஸ் 44 ரன்களில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து, மகிபால் லாம்ரோர் 3 ரன், தினேஷ் கார்த்திக் 16 ரன், கரன் சர்மா 2 ரன் என விரைவில் விக்கெட்டை இழக்க, 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் சேர்த்தது.

லக்னோ தரப்பில் ரவி பிஷ்னோய், அமித் மித்ரா, நவீன் உல் ஹக் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி களமிறங்குகிறது.

(Visited 9 times, 1 visits today)

KP

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே