விமானங்களில் வாக்கி டாக்கிகள் மற்றும் பேஜர்களை பயன்படுத்த தடை!
சமீபத்திய வாரங்களில் மத்திய கிழக்கில் வெடித்துள்ள மோதல்கள் சில மின்னணு சாதனங்களை பயன்படுத்துவதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன்காரணமாக விமானங்களில்பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகளுக்கு பரவலான தடையைத் தூண்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் இந்த தடையை அறிவித்துள்ளது. இவ்வாறான சாதனங்கள் பயணிகளிடம் இருந்தால் அவற்றை பொலிஸார் பறிமுதல் செய்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 17 அன்று, காசாவில் நடந்த மோதலில் பல பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள் வெடித்து சிதரின. இது பலர் உயிரிழக்க காரணமாக அமைந்தது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





