‘கருப்பு’ ரிலீஸ் குறித்த உண்மையை வெளியிட்ட ஆர்.ஜே.பாலாஜி
இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
‘ரெட்ரோ’ படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு ‘கருப்பு’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
‘கருப்பு’ படத்தில் த்ரிஷா, இந்திரன்ஸ், நட்டி, அனகா, மாயா ரவி, ஸ்வாசிகா உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்து வருகின்றனர்.
நாட்டார் தெய்வ வழிபாடு உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு கிராமத்து பின்னணியில் இந்தப் படம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே படத்தின் வெளியீடு எப்போது என்பதை படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி வெளிப்படுத்தியுள்ளார்.
தீபாவளிக்கு படம் வெளியாகாவிட்டாலும், படத்தின் முதல் பாடல் வெளியாகும். தனது நடனத்தால் சூர்யா அசரடித்துள்ளார். படம் அடுத்த வருடமே ரிலீசாகும்” என்று தெரிவித்துள்ளார்.






