கொழும்பில் கட்டிடத்தின் கூரையில் இருந்து எரிவாயு தோட்டாக்கள் அடங்கிய பை கண்டெடுப்பு
 
																																		போராட்டங்களின்போது கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 10 எரிவாயு தோட்டாக்கள் கொண்ட ஒரு பையொன்று கொழும்பு 7, ப்ளவர் பாதையிலுள்ள கொமன் கொபி ஹவுஸ் (Common Coffee House) கட்டிடத்தின் கூரையிலிருந்து கண்டெடுக்கப்பட்டதாக கறுவாத்தோட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கறுவாத்தோட்ட காவல்துறைக்கு கிடைத்த தகவலினடிப்படையில் குறித்த எரிவாயு தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
2022 ஆம் ஆண்டு பிரதமர் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்தின்போது பாதுகாப்புப் படையினரால் கொண்டு வரப்பட்ட எரிவாயு தோட்டாக்கள் போராட்டக்காரர்களால் கட்டிடத்திலேயே விடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக தலைமை காவல்் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கறுவாத்தோட்ட காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 3 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
