உலகம் ஐரோப்பா செய்தி

ட்ரம்ப்பின் கருத்தை வரவேற்கும் நைஜல் மற்றும் கெமி ; பிரித்தானிய அரசியலில் சலசலப்பு

சாகோஸ் (Chagos) தீவுகளின் இறையாண்மையை மொரீஷியஸிடம் ஒப்படைக்கும் பிரித்தானியாவின் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் “மிகப்பெரிய முட்டாள்தனமான செயல்” என கடுமையாக விமர்சித்துள்ளார்.

முக்கியமான இராணுவத் தளமான டியாகோ கார்சியாவை எவ்விதத் தேவையுமின்றி கையளிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள ட்ரம்ப், இந்த விவகாரத்தை தான் கிரீன்லாந்தைக் கைப்பற்ற விரும்புவதற்கான நியாயமாக முன்வைத்துள்ளார்.

ட்ரம்ப் நிர்வாகம் முன்னர் இதற்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த விமர்சனம் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் கெமி பேடெனோக், சாகோஸ் விவகாரத்தில் ட்ரம்ப்பின் எதிர்ப்பு சரியானது என்றும், இது நேட்டோ நாடுகளைப் பலவீனப்படுத்தும் என்றும் சாடியுள்ளார்.

இதனிடையே, ரிபார்ம் யுகே தலைவர் நைஜல் ஃபரேஜும் ட்ரம்ப்பின் கருத்தை வரவேற்றுள்ளார்.

இறையாண்மை ஒப்படைக்கப்பட்ட பின்னர், இராணுவத் தளத்தைப் பயன்படுத்த ஆண்டுக்கு 101 மில்லியன் பவுண்டுகளை பிரித்தானியா செலுத்த வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Puvan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!