துருக்கியில் மோசமான வானிலை இடம்பெற்ற கோர விபத்து – 10 பேர் உயிரிழப்பு

துருக்கியில் நெடுஞ்சாலையொன்றில் இடம்பெற்ற பயங்கர விபத்தில் கிட்டத்தட்ட 10 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தெற்கு துருக்கியின் மெர்சினில் உள்ள நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது.
மோசமான வானிலை காரணமாக பேருந்து ஒன்று எதிர் பாதையில் நழுவி இரண்டு கார்கள் மீது மோதியதாக செய்தி வெளியிட்டுள்ளன.
அப்போது மூன்று வாகனங்கள் மீதும் லொறியொன்று மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் மேலும் 39 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
(Visited 27 times, 1 visits today)