தேங்கிக் கிடக்கும் வழக்குகள் – பிரித்தானியாவில் தன்னார்வ நீதிபதிகளுக்கு அழைப்பு!
இங்கிலாந்து முழுவதும் நீதித்துறையில் புதிய மாற்றங்களை கொண்டுவரும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை விரைவுபடுத்த ஆயிரக்கணக்கான புதிய தன்னார்வ நீதிபதிகளை நியமிக்கும் நோக்கில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் ஆட்சேர்ப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
கிரவுன் (crown) நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் தீர்க்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2022 முதல் 2,000 க்கும் மேற்பட்ட நீதிபதிகள் பயிற்சி பெற்றுள்ளதாகவும் அவர்களை ஆட்சேர்ப்பு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் நீதி அமைச்சகம் (MoJ) குறிப்பிட்டுள்ளது.
துணைப் பிரதமரும் நீதித்துறை செயலாளருமான டேவிட் லாமி, நீதிபதிகள் வகிக்கும் முக்கிய பங்கை வலியுறுத்தி, மக்களுக்கு சேவை செய்ய வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
அனைத்து நீதிபதிகளும் வழக்குகளை விசாரிக்க வருடத்திற்கு குறைந்தது 13 நாட்களாவது தன்னார்வத் தொண்டு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீதிபதிகள் சங்கம் இந்த நடவடிக்கையை வரவேற்றாலும், நிழல் நீதி அமைச்சர், டேவிட் லாமியின் பதிவை விமர்சித்துள்ளார். இந்த நடவடிக்கை தொழிற்கட்சியின் தோல்வியை பிரதிபலிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே டேவிட் லாமி கடந்த டிசம்பர் மாதம் நீதித்துறைகளில் சில முக்கிய சீர்த்திருத்தங்களை முன்மொழிந்திருந்தார்.
அவற்றில் நீதிபதிகள் சிக்கலான வழக்குகளை கையாள ஏதுவாக தண்டனை காலத்தை அதிரிப்பது மற்றும் சில வழக்குகளுக்கான ஜூரி விசாரணைகளை ரத்து செய்வது உள்ளிட்ட திருத்தங்களை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





