பாகம் இல்லாமல் ஒரே படமாக திரைக்கு வருகின்றது பாகுபலி

பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை இணைந்து ஒரே திரைப்படமாக பாகுபலி தி எபிக் என்ற பெயரில் வெளியாக இருக்கிறது.
இந்தப் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படத்தின் கால அளவு 3 மணி நேரம் 44 நிமிஷம் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் நடிகர்கள் பிரபாஸ், அனுஷ்கா ஷெட்டி, சத்யராஜ் நடிப்பில் பாகுபலி திரைப்படம் உருவானது.
கடந்த 2015 ஆம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் இந்திய சினிமாவின் தரத்தையும் உயர்த்தியது.
இந்தப் படம் வருகிற அக். 31 ஆம் தேதி மறுவெளியீடாகிறது.
(Visited 3 times, 1 visits today)